நன்றி குங்குமம் தோழி *கோதுமையுடன் ஒப்பிடும்போது அரிசியில் உள்ள புரதம் குறைவுதான்.*கோதுமையில் இயற்கையிலேயே கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், கனிமங்கள், புரதங்கள் அதிகம் உள்ளன. *எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. *கோதுமையில் மாவுப்பொருள் 69.4%ம், நார் சத்து, ஈரப்பதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பி.காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. இதன் கலோரி மதிப்பு 341 ஆகும்.*கோதுமையில் பலதரப்பட்ட உணவு வகைகள் செய்யலாம். அது தசைகளை வலிமைப்படுத்தும்.*சரும ஆரோக்கியத்துக்குத் தேவையான ‘வைட்டமின்-இ’ கோதுமையில் நிரம்ப உண்டு.*கோதுமைப்புல்லை சாறாக உட்கொள்ளலாம். சாப்பாட்டுக்கு ஒருமணி நேரம் முன்பாகவோ, சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரம் கழித்தோ இதனை சாப்பிடலாம். *கோதுமைப்புல்லில் பீட்டா கரோட்டீன், கனிமங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பல வைட்டமின்களும் அடங்கியுள்ளது. ஒரு கிலோ கோதுமைப்புல் 25 கிலோ காய்கறிகளுக்குச் சமம். அதன் சத்துக்கள் மனித உடம்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், புத்துயிர் அளிப்பதாகும்.தொகுப்பு: வத்சலா சதாசிவன், சென்னை.
புத்துயுர் அளிக்கும் கோதுமை!
previous post