புத்தாண்டையொட்டி ரசிகர்களை சந்தித்த ரஜினி

சென்னை:  ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டையொட்டி தனது வீட்டுக்கு வெளியே காத்திருக்கும் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திப்பார். அவர்களிடமிருந்து புத்தாண்டு வாழ்த்துகளை பெற்றுக்கொள்வார். அதன்படி நேற்று காலை சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டுக்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். அப்போது வெளியே வந்த ரஜினிகாந்த், அவர்களை பார்த்து கையசைத்தார். பிறகு அவர்களின் வாழ்த்துகளை பெற்றார். தனது டிவிட்டர் பக்கத்தில், ‘அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார். இதுபோல, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு