புத்தாண்டு கொண்டாட்டத்தில் சாலைகளில் சாகசம் செய்தால் பைக் பறிமுதல்: மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

 

விருதுநகர், டிச. 31: விருதுநகர் எஸ்பி னிவாச பெருமாள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டிச.31(இன்று) இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாக அமைதியாக கொண்டாடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. டிச.31(இன்று) இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள் முழுவதும் மற்றும் கோவில்கள், பள்ளிவாசல் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 43 இடங்களில் வாகன சோதனை, 13 சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை செய்யப்படும். மேலும் 69 இரு சக்கர வாகன ரோந்தும், 22 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்பட உள்ளது. மாவட்டத்தில் சுமார் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மதுபானம் அருந்தி யாரும் வாகனம் ஓட்டக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லவோ, சாகசம் செய்யவோ கூடாது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சியின் போது ஏற்பாட்டாளர்கள் மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளும் கட்டாயம் கடைப்பிடித்து ஒத்துழைப்பு தர வேண்டும். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரு மற்றும் நான்கு சக்கர வானங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை