புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளால் குழாய்களில் நீர்கசிவு- அசம்பு ரோட்டில் வழிந்தோடும் தண்ணீர்

நாகர்கோவில் : புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் காரணமாக குடிநீர் குழாய்களில் நீர்கசிவு ஏற்பட்டு நாகர்கோவில் அசம்பு சாலையில் தண்ணீர் வழிந்தோடுகிறது. நாகர்கோவில் மாநகர மக்களுக்கு முக்கடல் அணை மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் கோடை காலத்தில் தண்ணீர் மைனஸ் அளவுக்கும் கீழ் சென்று விடும். இதனால் முக்கடல் அணை தண்ணீர் போதுமானதாக இல்லை. ஏற்கனவே மாநகரில் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. மக்கள்தொகை அதிகரித்துள்ளதால் எதிர்காலத்தில் குடிநீர் தேவை அதிகரித்து பெருமளவில் தட்டுப்பாடு ஏற்படும்.  எனவே குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புத்தன் அணையில் இருந்து நேரடியாக குடிநீர் குழாய் மூலம் நாகர்கோவில், கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதற்கான மொத்த தூரம் சுமார் 31 கி.மீ. ஆகும். இதற்காக பாலமோர் ரோட்டில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.இந்தநிலையில் இந்த குழாய்கள் பதிக்கப்பட்ட இடம் சரியாக மூடப்படாமல் காணப்பட்டது. இவ்வழியே கனகர வாகனங்கள், டாரஸ் லாரிகள் இயக்கப்பட்டு அதன் அழுத்தம் காரணமாக ஏற்கனவே தண்ணீர் சென்றுகொண்டிருக்கும் மாநகராட்சி குடிநீர் குழாய்களில் பல இடங்களிலும் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. நாகர்கோவில், வடசேரி, அசம்பு ரோட்டில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்  பல்வேறு இடங்களில் நீர்க்கசிவும் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரம் முன்னர் இந்த பகுதியில் நீர்கசிவு ஏற்பட்டு அது சரி செய்யப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் அருகருகே நீர்கசிவு ஏற்பட்டு பள்ளம் தோண்டிய பகுதிகள் வழியாக தண்ணீர் வழிந்தோடுகிறது. இதனால் சாலையும் சேதமடைந்து வருகிறது….

Related posts

தமிழ்நாடு நீர்வளத்துறையின் புதிய இலச்சினை வெளியீடு: அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்

ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் : அமைச்சர் மா.சுப்ரமணியன்

திருவண்ணாமலை, கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு