புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடிக்கு ரூ.400 கோடி அபராதம் விதிப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

தூத்துக்குடி: தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடிக்கு ரூ.400 கோடி அபராதம் விதித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலை புதூர் பாண்டியபுரம் என்றும் இடத்தில் ஆந்திராவுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தால் இயங்க கூடிய சுங்கச்சாவடி உள்ளது. புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு எந்த வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. செண்டர் மீடியன் அமைக்காதது, சாலையை சரிவர பராமரிக்காததால் ரூ.400 கோடி அபராதம் விதித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திராவுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்துக்கு டெல்லியில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அதிகமாக விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள். அடிப்படை வசதிகள் செய்து தர கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்