புதுவையில் காவலர் உடல்தகுதி தேர்வு 2 கிலோ எடையை அதிகரிக்க 4 பேன்ட் அணிந்த இளம்பெண்

புதுச்சேரி:  புதுச்சேரி  காவல்துறையில் காவலர்கள், ரேடியோ, டெக்னீசியன், டெக் ஹேண்ட்லர் உள்ளிட்ட  421 பணியிடங்களுக்கான காவலர் தேர்வை கடந்த மாதம் 19ம்தேதி முதல் நடத்தி வருகிறது.  கடந்த 5ம்தேதி வரை நடைபெற்ற ஆடவர் உடல் திறன் தேர்வில் 1844 பேர் தேர்ச்சி  பெற்றனர். இதனிடையே மகளிருக்கான உடல்திறன், உடல் தகுதி தேர்வுகள் நேற்று முன்தினம்  துவங்கியது. முதல்நாளில் 324 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கான உடல் திறன், உடல்  தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டது. 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல்,  உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றவர்களில் 188 பேர் எழுத்துத்  தேர்வுக்கு தயாராகினர். வருகிற 11ம்தேதி வரை தொடர்ந்து மகளிருக்கான உடல்  திறன் தேர்வுகள் நடத்தப்படுகிறது. நேற்று 2ம் நாளாக மகளிருக்கான தேர்வு  நடத்தப்பட்ட நிலையில் 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 168  பெண்கள், உடல்திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதனிடையே முதல்நாள்  தேர்வின்போது ஒரு இளம்பெண் தனது உடல் எடையை அதிகரிக்க (2 கிலோ) 4  பேன்ட்களை அணிந்து வந்தது கண்டறியப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டார்….

Related posts

தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியீடு..!!

சாம்சங் போராட்டம் தொடர்பான பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை: சி.ஐ.டி.யு. சௌந்திரராஜன்