புதுப்பாக்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

 

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் புதுப்பாக்கம் ஊராட்சியில் நேற்று முன்தினம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில், புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

இந்த முகாமில் உள்ளாட்சி நிர்வாகம், மின்வாரியம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை, மாற்று திறனாளிகள் துறை, ஆதி திராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு கோரிக்கை எந்த துறை தொடர்பானது என்று ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஒன்றிய ஆணையாளர் சிவகலைச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி