புதுப்பட்டினம் ஊராட்சியில் துப்புரவு பணி முகாம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள, புதுப்பட்டினம் ஊராட்சி மற்றும் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் மெகா துப்புரவு முகாம் நேற்று  நடந்தது. புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால் தலைமை தாங்கினார். வாயலூர் ஒன்றிய கவுன்சிலர் தனபால், புதுப்பட்டினம் வணிகர் சங்க துணை தலைவர் கிங் உசேன்,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி.ஆர்.பெருமாள் முன்னிலை வகித்தனர். முகாமில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் தூய்மை பணியை துவக்கி வைத்தார். முகாமின்போது, ஊராட்சி முழுதும் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து அகற்றப்பட்டது. புதுப்பட்டினம்  ஊராட்சியை குப்பையில்லா சுகாதாரமான ஊராட்சியாக மாற்ற மக்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அணுமின் நிலைய இயக்குனர் வெங்கட்ராமன் கேட்டுக்கொண்டார். இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மாணவ – மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

அதிமுக பேனரில் மின்சாரம் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் படுகாயம்

கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை: கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கின் குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்..!!