புதுச்சேரி 45 அடி ரோட்டில் உயிரை காவு வாங்க காத்திருக்கும் சைடு வாய்க்கால் பள்ளம்-அரசு நடவடிக்கை எடுக்குமா?

புதுச்சேரி : புதுச்சேரி 45 அடி ரோட்டில் மனித உயிரை காவு வாங்க காத்திருக்கும் சைடு வாய்க்கால் பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுச்சேரி, 45 அடி ரோடு, வள்ளலார் சாலை சந்திப்பில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதையொட்டிய பகுதிகளில்  மாணவர்கள், நோயாளிகள், ெபாதுமக்கள் அங்கு வந்து பஸ்களில் ஏறி பயணிப்பது வழக்கம்.  மேலும் 45 அடி சாலையில் திருமண மண்டபங்கள், பொழுதுபோக்கு பூங்கா, தமிழ்ச்சங்கம் உள்ளிட்டவை உள்ளதால் அங்கு பிறபகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.இதற்கிடையே 45 அடி ரோடு, வள்ளலார் சாலை சந்திப்பு வளைவில் ைசடு வாய்க்கால் மீது போடப்பட்ட இரும்பு கம்பி வலைகள் பெயர்க்கப்பட்டு திறந்த நிலையில் காணப்படுகிறது. இரவு நேரங்களில் மட்டுமின்றி பகலிலும் அவ்வழியாக நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் தவறி விழுந்து படுகாயமடையும் அவலம் உள்ளது. கரணம் தப்பினால் மரணம்… என்ற நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள இந்த வாய்க்கால் பள்ளத்தினை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.சமீபத்தில் அவ்வழியாக சென்ற தனியார் பள்ளி நிர்வாகி தவறி விழுந்ததோடு, பொதுமக்களும் பள்ளத்தை கவனிக்காமல் அதில் விழுந்து காயமடைந்து வருவதால் போர்க்கால அடிப்படையில் அவற்றை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு அரசு நடவடிக்கை எடுக்குமா?….

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்