Monday, July 8, 2024
Home » புதுச்சேரி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காமல் முதல்வர் ரங்கசாமி இழுத்தடிப்பு!: பாஜக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பிரதமர் மோடியை சந்திக்க முடிவு..!!

புதுச்சேரி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காமல் முதல்வர் ரங்கசாமி இழுத்தடிப்பு!: பாஜக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பிரதமர் மோடியை சந்திக்க முடிவு..!!

by kannappan

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காமல் முதலமைச்சர் ரங்கசாமி இழுத்தடிப்பதால் பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேட்சைகள் 12 பேர் டெல்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி சார்பில் கடந்த மே 7ம் தேதி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றார். அமைச்சர், சபாநாயகர் பதவி பிரிப்பதில் இழுபறி ஏற்பட்டு ஒரு வழியாக என்.ஆர். காங்கிரசுக்கு 3 அமைச்சர்கள், பாஜகவுக்கு ஒரு சபாநாயகர், 2 அமைச்சர் என 55 நாட்களுக்கு பிறகு கடந்த 27ம் தேதியன்று பதவியேற்றனர். ஆனால் அமைச்சர்கள் பதவியேற்று 4 நாட்களாகியும் இதுவரை இலாகா ஒதுக்காமல் முதல்வர் ரங்கசாமி தாமதம் செய்வதாக பாஜக-வினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் பாஜக அமைச்சர்கள், 6  எம்.எல்.ஏக்கள், 3 நியமன எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏக்கள் டெல்லி செல்லவுள்ளனர். அங்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இதுகுறித்து முறையிட உள்ளனர். …

You may also like

Leave a Comment

19 − 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi