புதுச்சேரியில் மின்துறை தனியார்மயம் கைவிடக்கோரி மின் ஊழியர்கள் ஸ்டிரைக்

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி  மின்துறை ஊழியர்கள் 2022 பிப்ரவரியில் 2 நாள் வேலை நிறுத்தம்  மேற்கொண்டனர். அப்போது முதல்வர், அனைவரையும்  பாதிக்காத வகையில் நல்லதொரு முடிவு எடுப்பதாக அளித்த உறுதிமொழியை ஏற்று  போராட்டத்தை தள்ளி வைத்தனர். ஆனால் ஒன்றிய அரசின் நிதியை  பெறுவதற்காக புதுச்சேரி அரசு மின்துறையை தனியார் மயப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக புகார் எழுந்தது. புதுச்சேரி  முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சரின் தவறான நடவடிக்கைக்கு கண்டனம்  தெரிவிக்கும் வகையில் மின்துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உப்பளம் மின்துறை தலைமை அலுவலகத்தில் பணிகளை புறக்கணித்து  திரண்ட 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தரையில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது நியாயமான கோரிக்கை நிறைவேறும்வரை  போராட்டத்தை தொடரப்போவதாக எச்சரித்தனர். …

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு