புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை!: 3 மணி நேரம் மதுக்கடைகளை மூட ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாடு முழுவதுமாக கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் சில கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால்  புத்தாண்டை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் குவிகின்றனர் புதுவையில் குவிகின்றனர். இது ஒமிக்ரான் பரவலுக்கு வழிவகுத்துவிடும். ஆதனால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று கரிகாலம்பக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெகன்நாதன் என்பவரும், ஸ்ரீதர் என்ற வழக்கறிஞரும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை பொதுநல வழக்காக தொடர்ந்திருந்தார்கள். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பரத் சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. இந்த வழக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடைபெற்ற போது, புத்தாண்டு தினத்தை ஒட்டி புதுச்சேரியில் டிசம்பர் 31ல் மதுவிற்பனையை நிறுத்தலாமா? என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். டிசம்பர் 31 இரவு 7 மணி முதல் ஜனவரி 1 வரை பார்களுக்கு அனுமதிக்கூடாது என உத்தரவிட போவதாகவும் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து சற்றுநேரத்தில் புதுச்சேரி அரசு விளக்கம் தர வேண்டும் எனவும் குறிப்பிட்டனர். இந்த நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவை அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாலா, ஏற்கனவே ஹோட்டல்கள் புக் ஆகிவிட்டது என்றும் குறிப்பாக மற்ற மாநிலங்களில் புத்தாண்டுக்கு தான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர மது விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் வாதிட்டார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கண்காணிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதுமட்டுமின்றி 3 மாதங்களுக்கு முன்பே வெளிநாட்டு பயணிகள் வந்துவிட்டனர் என்றும் இது மாநிலத்தின் வருவாய் சார்ந்த பிரச்னை என்றும் குறிப்பிட்டார். எனவே மதுபான கடைகளுக்கு எந்தவொரு தடையையும் விதிக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்றும், இருப்பினும் டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணி முதல் 1 மணி வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்….

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு