புதுச்சேரியில் அமைச்சர் பதவி கேட்டு பாஜக அலுவலகத்தில் குவிந்த எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள்!: கொரோனா விதிமுறைகளை மீறி குவிந்ததால் பரபரப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் அமைச்சர் பதவி வழங்கக்கோரி எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கொரோனா விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியின்றி குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தொற்று பரவும் அபாயமும் நேரிட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வென்றாலும் இதுவரை ரங்கசாமி மட்டுமே முதல்வராக பதவியேற்றுள்ளார். இதுவரை அமைச்சரவை பதவியேற்காத நிலையில், கூட்டணிக்குள் அமைச்சர் பதவிகளை பெறுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் தங்களுக்கு மந்திரி பதவி கேட்டு காய் நகர்த்தி வருகின்றனர். 
அதில் புதுச்சேரி ஊசுடு தனித்தொகுதி எம்.எல்.ஏ சாய்சரவணகுமாருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் புதுச்சேரி பாஜக அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். இதனிடையே பாஜகவிற்கு இரண்டு அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் பதவி மட்டுமே தருவதில் முதல்வர் ரங்கசாமி உறுதியாக உள்ளதாகவும், ஆனால் பாஜக சார்பில் 3 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவி பெறுவதில் குறியாக இருப்பதாகவும் தெரிகிறது. இதனிடையே பாஜக-வினர் பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேச தயார் என்றும் ஆனால் முதல்வர் ரங்கசாமியை யாரும் சந்திக்கவில்லை என்றும் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயபால் வாட்ஸ் அப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Related posts

உத்தர பிரதேசத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 5ஆவது ஓநாய் பிடிபட்டது.

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அட்டை: ஒன்றிய அரசு அறிவிப்பு