புதுக்கோட்ைடயில் கலைஞர் நூற்றாண்டு விழா ரத்ததான முகாம் அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்

 

புதுக்கோட்டை,ஆக.14: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி புதுக்கோட்ைட அரசு மருத்துவ மனையில் ரத்ததான முகாமை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் வடக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் முத்துகருப்பன் ஏற்பாட்டின் பேரில் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ரத்ததான முகாமில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்எம் அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, திமுக நகர செயலாளர் செந்தில் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரும் ரத்தம் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் நிலையில் திமுக மருத்துவர் அணி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் கல்லூரி மாணவர்கள் என்சிசி மாணவர்கள் மற்றும் திமுக மருத்துவ அணி நிர்வாகிகள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் உதவியாக ரத்ததான முகாம் அமைந்தது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை