புதுக்கோட்டை புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கந்தர்வகோட்டை, ஜூலை 12: புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெயபால் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், சிறு குடும்பம் நெறி, தாய் சேய் நலம் பாதுகாத்தல், பெண் சிசு கொலையை தடுத்தல், குடும்ப கட்டுப்பாட்டின் அவசியம், சுற்றுச்சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்த்தல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவை குறித்து புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருந்துவர் மணிமாறன் ஆணைக்கு இணங்க மருத்துவ அலுவலர் பரணிதரன்,

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருண் பிரகாஷ் சுகாதார ஆர்வளர் நல்லமுத்து ஆகியோர் மாணவர்களிடம் எடுத்துரைத்தனர். தொடர்ந்து உலக மக்கள் தொகை மற்றும் குடும்ப நலன் குறித்து மாணவர்களுக்கு வினாடி- வினா போட்டிகள் வைத்து அதில் சிறப்பாக பதில் அளித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் மஞ்சப்பை அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் மாணவர்களுக்கு இலவசமாக மஞ்சப்பைகளை விநியோகித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செல்வகுமார் செய்திருந்தார்.

Related posts

நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

உடன்குடியில் நாளை வருமுன் காப்போம் திட்ட முகாம்

வேப்பங்காடு பள்ளி ஆண்டுவிழா