புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல்வைப்பு: கலெக்டர் தலைமையில் நடந்தது

 

புதுக்கோட்டை, ஜூன் 7: புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய இருப்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து மின்னணு இயந்திரங்கள் வைப்பறை மூடி சீல் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) வெங்கடாசலம், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷோபா, தனி தாசில்தார் (தேர்தல்கள்) சோனைக் கருப்பையா, தாசில்தார் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு