புதுக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் கட்டுமான பணிகள்

கந்தர்வகோட்டை, மே 27: புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை திட்ட இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெருங்களூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-2022ம் ஆண்டிற்கு அங்கன்வாடி கட்டிடம், நெற்களம், மயானம் மேம்பாடு மற்றும் மணவாத்திபட்டியில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் சமையல் கூடம் கட்டும் கட்டுமான பணிகள், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குதல் மற்றும் மங்களத்துபட்டி ஊராட்சி சமையற்கூடம் புனரமைப்பு செய்தல் தொடர்பான பணிகளை புதுக்கோட்டை திட்ட இயக்குநர் கவிதா பிரியா நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன் (கிராம ஊராட்சி) வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் கண்ணகி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் இளங்கோவன், பூங்கொடி, தமிழ்செல்வி பெருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர் மற்றும் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்