புதுக்கோட்டை அடுத்த கீரனூரில் பாம்பை அடித்து கொன்று வீடியோ பதிவிட்டவர் கைது

புதுக்கோட்டை, ஜூன்9: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மலையாண்டி நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்டி என்பவர் மகன் மெய்ஞான செந்தில்குமார் (28). இவர் சமூக வலைதளங்களான யூடூப், இன்ஸ்டாகிராமில் ரொம்ப பெருமையா இருக்கு என்ற பெயரில் பல்வேறு வகையான வீடியோக்களை வெளியிட்டு யூடூபராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மே 30ம் தேதி இரவு பாம்பு ஒன்று அவரது ஊருக்குள் நுழைந்ததையடுத்து அந்தப் பாம்பை கட்டையால் அடித்து கொன்று அந்த பாம்பு கட்டுவிரியன் பாம்பு என்று கூறி வீடியோ எடுத்து அவரின் சேனலின் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் இதனை அறிந்த கீரனூர் சரக வனத்துறை அதிகாரியான பொன்னம்மாள் தலைமையிலான வனத்துறையினர் மெய்ஞான செந்தில்குமாரிடம் இதுகுறித்து விசாரித்தபோது அவர் பாம்பை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனை அடுத்து மெய்ஞான செந்தில்குமார் அடித்துக் கொன்றது விஷமில்லா தண்ணீர் பாம்பு என்று தெரிவித்ததோடு அந்த விஷமில்லா தண்ணீர் பாம்பை அடித்து கொன்று வீடியோ பதிவு செய்து அதனை வெளியிட்ட குற்றத்திற்காக வனத்துறையின் வனவிலங்கு சட்டம் 1972 பிரிவின் கீழ் மெய்ஞான செந்தில்குமாரை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் கீரனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்