புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் வெளிநாட்டு தபால் அனுப்புவதற்கான சிறப்பு முகாம்

 

புதுக்கோட்டை, ஜூன் 8: புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் வெளிநாட்டு தபால் அனுப்புவதற்கான சிறப்பு முகாம் வரும் ஜூலை 5ம்தேதி வரை நடக்கிறது. இந்திய அஞ்சல் துறை புதுக்கோட்டை அஞ்சல் கோட்டம் ஆதார் சிறப்பு முகாம் ஜூலை 5ம்தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய துணை, தலைமை அஞ்சலகங்களில் சிறப்பு ஆதார் முகாம் அமைக்கப்பட்டு ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் காலை 8 மணி முதலே ஆதார் சேவை வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து துணை, தலைமை அஞ்சலகங்களில் ஜூலை 5ம்தேதி வெளிநாட்டு தபால் அனுப்புவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் உடனடியாக பெற்று பயனடையுமாறு, புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு