புதுக்கோட்டையில் பள்ளி மாணவன் மரணம்: அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான்விடுதியை சேர்ந்தவர் நாடிமுத்து- போதினி தம்பதி. இந்த தம்பதியினருக்கு 9 வயதில் நிதிஷ்குமார் என்ற மகன் உள்ளார்.‌ நிதிஷ்குமார் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவன் நிதிஷ்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த  மாணவனை ஆசுவாசப்படுத்திய ஆசிரியர்கள், பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்தவர்கள் நிதிஷ்குமாரை உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மாணவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காமல் அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி நிதிஷ்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக அலட்சியமாக செயல்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி, வகுப்பு ஆசிரியர் ஆரோக்கிய அமல்ராஜ் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.       …

Related posts

அமராவதி முதலை பண்ணைக்குள் சுற்றுலா பயணி தொலைத்த 3 பவுன் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த சிறுவர்கள்

பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு