புதுக்கோட்டையில் தமிழ் கல்லூரி துவங்க வேண்டும்

புதுக்கோட்டை, டிச.18: புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் தங்கம் மூர்த்தி தலைமையில்எம்.எஸ்.சுவாமிநாதன்ஆராய்ச்சி நிறுவனத்தின்அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாதம் ஒரு கூட்டத்தை இலக்கிய நிகழ்வாக நடத்துவதென்றும், ஆண்டுதோறும் ஒரு மாபெரும் இலக்கியத்திருவிழா நடத்துவதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வாழ்நாள் முழுவதும் தமிழுக்குப் பாடுபட்டு வரும்அறிஞர்களுக்கு “வாழ்நாள் தமிழ்த் தொண்டர் விருது“ வழங்குவது என்றுதீர்மானிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் தமிழ்க் கல்லூரி ஒன்றை தொடங்கதமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்ச்சங்கத்தின் முதல்விழாவாக பொங்கல் திருநாளை முன்னிட்டு “தமிழர்மரபுவிழா“ கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சங்கத்தின் ஆலோசகர் டாக்டர்ராஜ்குமார், துணைத்தலைவர் கவி.முருகபாரதி, சட்டஆலோசகர் அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். முன்னதாக செயலாளர் மகாசுந்தர் வரவேற்றார், முடிவில் பொருளாளர் கருப்பையா நன்றி கூறினார்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்