புதுக்கோட்டையில் இந்த ஆண்டு 169 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 169 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். கலிங்கிபட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சம்பா சாகுபடி விவசாயிகளுக்காக தற்போது 69 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. அடுத்தகட்டமாக 100 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் அமைக்கப்படும். நெல் கொள்முதலுக்கு ஆன்லைனில் பதிவு செய்வதால் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்று குறிப்பிட்டார். …

Related posts

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்