புதுக்கோட்டையில் அரசு சார்பில் நீச்சல் மற்றும் கிரிக்கெட் பயிற்சி; நல்ல பலன் தருவதாக மாணவர்கள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விளையாட்டு அரங்கில் கோடை விடுமுறையை ஒட்டி நடத்தப்படும்  பயிற்சி முகாம்களில் ஏராளமானோர் ஆர்வாமுடம் கலந்து கொண்டு உள்ளனர். கோடை விடுமுறையை பயனுள்ளதாக புதுக்கோட்டையில் அரசு சார்பில் நீச்சல் மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட பயிற்சி முகாம்கள் நடத்தபட்டு வருகின்றனர், மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் தனி தனியாக 12 நாட்கள் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த முகாமை கோடையில் மட்டும் இல்லாமல்  மற்ற நாட்களிலும் தொடர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளார். இதே போன்று புதுக்கோட்டை அரசு மன்னார் கல்லுரி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 12வயது முதல் 19வயது வரை உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கற்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டாக கொரோனா  காரணமாக இந்த முகாம்கள் நடைபெறவில்லை. இந்நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள பயிற்சி முகாம்கள் நல்ல பலனை தருவதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் …

Related posts

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்