புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 68 பேருக்கு காய்ச்சல்

புதுக்கோட்டை, நவ.29:புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 68 பேர் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களோடு சேர்த்து மொத்தம் காய்ச்சல் காரணமாக 216 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பருவ மழை காலங்களில் வரக்கூடிய காய்ச்சல் அதிகரிப்பால் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி என இரண்டு சுகாதார மாவட்டங்கள் உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 68 பேர் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களோடு சேர்த்து மொத்தம் காய்ச்சல் காரணமாக 216 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நேற்று வரை ஒருவர் மட்டுமே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் நலமடைந்து வீடு திரும்பி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 202 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு