புதிய வீடுகள் கட்டித்தர கலெக்டரிடம் கோரிக்கை

 

சிவகங்கை, மே 29: சிவகங்கை பழமலை நகர் நரிக்குறவர் குடியிருப்பில் சாலை போடும் பணிக்காக இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் ஆஷாஅஜித்திடம் மனு அளித்தனர். தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு சார்பில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சிவகங்கை பழமலை நகரில் நரிக்குறவர் குடியிருப்பு உள்ளது.

இங்கு கடந்த 1982ம் ஆண்டு அரசு சார்பில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு குழும வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் சாலை பணிக்காக குடியிருப்பில் உள்ள 9வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. வீடு இடிக்கப்படுவதற்கு முன் வீட்டின் உரிமையாளர்களுக்கு எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை.

மேலும் இப்பகுதியில் இருந்த இரண்டு கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இடிக்கப்பட்ட வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். ஏற்கனவே இருந்ததுபோல பட்டாவுடன் 3 சென்ட் இடம் வழங்கி அதில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். புதிய கோயில்கள் கட்டித்தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆஷாஅஜித் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு