புதிய தொழில் நுட்ப விதிகளுக்கு எதிராக கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதிய தொழில் நுட்ப விதிகளுக்கு எதிராக கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில்  பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்ப விதிகளை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் புதிய விதிகளுக்கு பேஸ்புக், வாட்ஸ் ஆப், கூகிள் நிறுவங்கள் ஒப்புதல் தெரிவித்த  நிலையில் டிவிட்டர் மட்டும் ஆட்சியப்பங்களை தெரிவித்தது.இந்நிலையில் ஒன்றிய அரசின் புதிய தொழில்நுட்பவிதிகளுக்கு எதிராக கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் இசைக்கலைஞராக அரசியலமைப்பு வழங்கியுள்ள தனியுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை மதிப்பதாகவும், தனியுரிமை என்பது இசையை போன்ற அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு கலைஞனுடைய தனியுரிமையும் உச்சநீதிமன்றம் அங்கிகாரிப்பதாக அவர் கூறியுள்ளார். அரசியலமைப்பு வழங்கியுள்ள சுதந்திரத்தை தணிக்கை செய்ய ஒன்றிய அரசின் புதிய விதிகள் வழிவகுப்பதாக டி.எம்.கிருஷ்ணா குற்றம் சாட்டியுள்ளார். புதிய தொழில்நுட்ப  வ்விதிகள் கலைஞனான தனது உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாக புகார் கூறியுள்ளார். ஏனவே ஒன்றிய அரசின் புதிய தொழில்நுட்ப விதிகளை ரத்துசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த வலக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜீ அமர்வு 3 வாரங்களில் பதியளிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்