புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

சென்னை, ஜூலை 6: புதிய குற்றவியல் சட்டங்களால் எப்ஐஆர் பதிவு செய்யும் போது எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்றும், பெருநகர காவல்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் முதல் எஸ்ஐக்கள் வரையிலான 10 ஆயிரம் பேருக்கு புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புனரமைக்கப்பட்ட வாகன நிறுத்தும் இடத்தை, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் பேசியதாவது: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே பல வசதிகள் உள்ளன. புதிதாக வாகன நிறுத்துமிடம் புனரமைக்கப்பட்டுள்ளது. கமிஷனர் அலுவலகத்திற்கு தினசரி 300க்கும் தேற்பட்டோர் புகார் அளிக்க வருகிறார்கள். புதன்கிழமை தோறும் நானே நேரடியாக பொதுமக்களிடம் புகார்கள் பெற்று, நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறேன். புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதுகுறித்து 3 மாதங்களாக டிஜிபி அலுவலகத்தில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தினமும் ஆன்லைன் மற்றும் நேரடியாக கடந்த 3 மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் மற்ற புலனாய்வு பிரிவுகளில் பணியாற்றும் அனைவருக்கும் 100 சதவீதம் பயிற்சி அறிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்த படியாக சிலர் ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவில் இருப்பவர்களுக்கு நேரடியாக இந்த புதிய 3 குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க இருக்கிறோம். காவல் நிலையத்தில் உள்ள விசாரணை அதிகாரிகளுக்கு 100 சதவீதம் பயிற்சி கொடுத்துவிட்ேடாம். அவர்களும் வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இதுதொடர்பாக இதுவரை எந்த பிரச்னையும் வரவில்லை. ஆன்லைன் மூலம் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சி அளித்தாலும், சிலருக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலேயே பயிற்சி அளிக்கப்பட்டது.

எனது சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். சில சட்டம் பழைய சட்டங்களின் எண்கள் மற்றும் சீரியல்கள் தான் மாற்றப்பட்டுள்ளது. அசல் எப்படி இருந்ததோ அப்படியே தான் புதிய சட்டங்கள் இருக்கிறது. இதில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. காவல் அதிகாரிகளிடம் நான் கேட்கும் போதும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தான் சொல்கிறார்கள். புதிய குற்றவியல் சட்டத்தின் மூலம் வழக்குப்திவு செய்யும் போது பெரிய பிரச்னை எதுவும் வரவில்ைல. சென்னை பெருநகர காவல்துறையில் இன்ஸ்பெக்டர்கள் முதல் எஸ்ஐக்கள் உட்பட 10 ஆயிரம் பேருக்கு 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சி அளித்து இருக்கிறோம். பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் புகார்கள் காவல்ஆணையர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு வருகிறது என்றால், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை மீது உள்ள நம்பிக்கையால் தான் பொதுமக்கள் புகார்கள் கொடுக்க வருகிறார்கள்.

புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதால்தான் பொதுமக்கள் அதிகளவில் வருகிறார்கள். புகார்கள் மீது 100 சதவீதம் நடவடிக்கை எடுப்பதே காவல்துறையின் நோக்கம். நாள்தோறும் வரும் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் குறித்து உயர் மட்ட அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது. மாநிலம் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் விசாரணை நடைபெற்று வருகிறது. இருந்தாலும் மிரட்டல்கள் எங்கு இருந்து வருகிறது என்று வெளிநாட்டு நிபுணர்களுடன் கண்டுபிடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பதற்றம் அடைய வேண்டாம் என்று விழிப்புணர்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி