புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம்,ஜூலை 3: வேதாரண்யத்தில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றியஅரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேதாரண்யத்தில் செயல்படும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியியல் நீதிமன்றத்தின் முன் புதிய முப்பெரும் சட்டங்களை திரும்ப பெற ஒன்றிய அரசை வலியுறித்தி வேதாரண்யம் வழக்கறிஞர் சங்கத்தை சார்ந்தவர்கள் வேதாரண்யம் வழக்கறிஞர் சங்க தலைவர் அன்பரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாரி பாலன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்