புதிய கல்வி கொள்கை குறித்த கலந்துரையாடலை கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் நடத்த வேண்டும்; மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம்

சென்னை: புதிய கல்வி கொள்கை குறித்த கலந்துரையாடலை கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் நடத்துவதே ஏற்புடையது என மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.  இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: கோவிட் நோய்த்தொற்று காலத்தில் கல்வி அமைப்பு மேலாண்மை, பள்ளிகளில் இணைய வழி  கல்வி தொடர்வதற்கான வழிமுறைகள், புதிய தேசிய கல்விக்கொள்கையை  நடைமுறைப்படுத்துதலின்  நிலை போன்றவை குறித்து மாநிலங்களின் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் இன்று கலந்துரையாட இருப்பதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழக அரசு சார்பில் தமிழக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள், மத்திய கல்வி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இக்கலந்துரையாடல் கூட்டத்தை தமிழ்நாடு அரசின் கல்வித்துறை அமைச்சர் மற்றும்  உயரதிகரிகளுடன் நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும். அக்கூட்டத்தில் மாநில அரசின் சார்பாக மிகமுக்கியமான பொருண்மைகளான புதிய தேசிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்துதலின் நிலை போன்றவற்றின் மீதான கருத்துக்களையும், பரிந்துரைகளையும் தாம் அளிக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி