புதிய கட்டிடங்களை ஐகோர்ட் நீதிபதி ஆய்வு

சேலம், மே 18: சேலம் நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிங்களை ஐகோர்ட் நீதிபதி ஆய்வு மேற்கொண்டார். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான 98 லாசேம்பர் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் தற்போதுவரை 30 அறைகள் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் வழக்கறிஞர்களுக்கான உணவு சாப்பிடும் வளாகம் கட்டப்பட்டுள்ளது. மேலும் ₹64 கோடி செலவில் 16 நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட இருக்கிறது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், கட்டிடங்களை கண்காணிக்கும் கமிட்டியின் சேர்மேனுமான நீதிபதி சுந்தர் நேற்று சேலத்தில் இந்த இடங்களை ஆய்வு செய்தார். கட்டப்பட்டுள்ள லா சேம்பர், உணவு அருந்தும் அறை மற்றும் புதியதாக கட்டப்பட உள்ள இடங்களையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஐகோர்ட் பதிவாளர் தனபால், சேலம் கலெக்டர் கார்மேகம், மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, நீதிபதிகள் தீபா, ராமஜெயம், விவேகானந்தன், வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் முத்துசாமி, செயலாளர் முத்தமிழ்செல்வன், நிர்வாக குழு உறுப்பினர்கள் யுவராஜ், நல்லதம்பி, கருணாகரன், முரளி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் நீதிபதி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், பணி முடித்து விரைவில் திறக்கப்படவேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்