புதிய உச்சத்தை தொட்ட விமான எரிபொருள் விலை!.. 1000 லிட்டர் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியதால் விமான கட்டணங்களும் உயர வாய்ப்பு!!

டெல்லி: விமானங்களுக்கு பயன்படும் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் விரைவில் விமான கட்டணங்கள் உயரும் சூழல் எழுந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரங்களுக்கு ஏற்ப விமானங்களுக்கான எரிபொருள் விலை ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் 16வது நாளிலும் இருமுறை மாற்றம் செய்யப்படுவது வழக்கம். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இன்று 18.5% அளவிற்கு ATF எனப்படும் விமான எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் தலைநகர் டெல்லியில் கிலோ லிட்டர் விலை ரூ.1,10,666 ஆக உயர்ந்துள்ளது. 15 நாட்களில் கிலோ லிட்டருக்கு 17,135 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை விமான எரிபொருள் அடைந்துள்ளது.சென்னையில் 1 கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.1,14,133 ஆக உள்ளது. மும்பையில் 1 கிலோ லிட்டர் விலை ரூ.1,02,119 ஆகவும் கொல்கத்தாவில் ரூ. 1,14,979க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது. விமானங்களுக்கான எரிபொருள் விலை திடீரென உச்சம் தொட்டுள்ளதால் உடனடியாக பயணக் கட்டணங்களை உயர்த்தும் நெருக்கடிக்கு விமான போக்குவரத்து நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன….

Related posts

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரிப்பு: பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.3.57 லட்சம் கோடி இழப்பு

வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குச்சந்தை : வங்கி, எண்ணெய் நிறுவன பங்குகள் மதிப்பு சரிவு.. முதலீட்டார்களுக்கு ரூ.8 லட்சம் கோடி வரை இழப்பு

சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவு