புதிதாக பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: புதிதாக மாற்றியமைக்கப்பட்ட தென்காசி மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:தென்காசி வடக்கு மாவட்ட அவைத் தலைவராக பத்மநாபன், செயலாளராக ஈ.ராஜா, துணை செயலாளர்களாக வே.மனேகரன்(பொது), ராஜதுரை(ஆதி திராவிடர்),புனிதா(மகளிர்), பொருளாளராக இல.சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக தங்கவேலு, சீனிவாசன், பரமகுரு, பொதுக்குழு உறுப்பினர்களாக வெள்ளத்துரை, தேவதாஸ், மாரிச்சாமி, பராசக்தி, சாகுல்ஹமீது, வேல்சாமிபாண்டியன், மகேஸ்வரி, ஒன்றியச் செயலாளர்களாக மாரிமுத்து(சங்கரன்கோவில் வடக்கு), சங்கரபாண்டியன்(சங்கரன்கோவில் தெற்கு), பெரியதுரை (மேலநீலிதநல்லூர் கிழக்கு), விஜயகுமார்(மேலநீலிதநல்லூர் தெற்கு), ராமச்சந்திரன்(மேலநீலிதநல்லூர் மேற்கு), கிறிஷ்டோபர்(குருவிகுளம் கிழக்கு), சேர்மத்துரை(குருவிகுளம் மேற்கு), கடற்கரை(குருவிகுளம் தெற்கு), முத்தையபாண்டியன் (வாசுதேவ நல்லூர் வடக்கு), பூசைப்பாண்டியன்(வாசுதேவநல்லூர் தெற்கு) மற்றும் சங்கரன்கோவில் நகரச் செயலாளராக பிரகாஷ், புளியங்குடிக்கு அந்தோணிசாமி, திருவேங்கடம் பேரூர் கழக செயலாளராக மாரிமுத்து, சிவகிரிக்கு செண்பகவிநாயகம், ராயகிரிக்கு குருசாமி, வாசுதேவநல்லூருக்கு பாலசுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.தென்காசி தெற்கு மாவட்ட அவைத் தலைவராக சுந்தரமகாலிங்கம், செயலாளராக சிவபத்மநாபன், துணைச் செயலாளர்களாக தமிழ்ச்செல்வன்(பொது), கென்னடி(ஆதி திராவிடர்), கனிமொழி(மகளிர்), முகம்மது செரிப்(பொருளாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக செல்லத்துரை, சேசுராஜன், சேக்தாவூது, முத்துப்பாண்டி, ஆறுமுகச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்களாக முகமது ரகீம், சமுத்திரபாண்டியன், கதிர்வேல்முருகன், ஏ.பி.அருள், ரவிச்சந்திரன், ராஜேஸ்வரன், சாமிதுரை, தமிழ்செல்வி, ஒன்றியச் செயலாளர்களாக சுரேஷ்(கடையநல்லூர்), அழகுசுந்தரம்(தென்காசி மேற்கு), திவான் ஒலி(தென்காசி மேற்கு), சிவன்பாண்டியன்(கீழப்பாவூர் கிழக்கு), சீனிதுரை(கீழப்பாவூர் மேற்கு), அன்பழகன்(ஆலங்குளம் வடக்கு), செல்லத்துரை(ஆலங்குளம் தெற்கு), மகேஷ்மாயவன்(கடையம் வடக்கு, ஜெயக்குமார்(கடையம் தெற்கு), மாரிவண்ணமுத்து(பாப்பாக்குடி), ரவிசங்கர்(செங்கோட்டை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் கடையநல்லூர் நகரச் செயலாளராக அப்பாஸ் சாகுல் ஹமீது, தென்காசிக்கு சாதிர், செங்கோட்டைக்கு வெங்கடேசன், சுரண்டைக்கு ஜெயபாலன், பேரூர் கழகச் செயலாளர்களாக முத்தையா(இலஞ்சி), சுடலை(மேலகரம்), சங்கர்(குற்றாலம்), பண்டாரம்(சுந்தரபாண்டியபுரம்), முகமது உசேன்(வடகரை), ராஜராஜன்(பண்பொழி), ஜெகதீசன்(கீழப்பாவூர்), நெல்சன்(ஆலங்குளம்), அழகேசன்(ஆழ்வார்குறிச்சி, லட்சுமணன்(முக்கூடல்), சிதம்பரம்(ஆயக்குடி), வெள்ளத்துரை(அச்சன்புதூர்), முத்து(எ)செல்லக்கனி(சம்பவர் வடகரை, கோபால்(புதூர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு