புதர் மண்டி சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிய அண்ணாபூங்கா

உடுமலை: உடுமலை நகரின் மத்தியில் அமைந்துள்ள அண்ணா பூங்கா, ஒரு காலத்தில் முதியவர்கள் பொழுது போக்குவதற்கு, குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கும் ஏற்ற இடமாக இருந்து வந்தது. நகராட்சியின் 20 வது வார்டுக்குபட்ட  சர்தார் வீதியில் அமைந்துள்ள இப்பூங்கா 20 சென்ட் பரப்பளவு கொண்டது. 40க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரங்களை கொண்ட இப்பூங்கா, முதியவர்கள் இளைபாறி பேசி மகிழ்திடுவதற்காக சிமெண்ட் பெஞ்ச், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை இங்கு அமைக்கப்பட்டிருந்தன.நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பூங்கா கடந்த 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி காட்சி அளிக்கிறது. செடி,கொடிகள் அடர்ந்து வளர்ந்ததோடு, புதர்களாக காட்சி அளிக்கும் இப்பூங்கா தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. பூங்காவில் சுற்றுச்சுவரில் அமர்ந்து குடிமகன்கள் மது குடித்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர். பூங்காவின் அருகிலேயே கேந்திரவித்யாலயா பள்ளி, மாவட்ட கல்வி அலுவலகம்,  ஆண்கள் மேல்நிலைபள்ளி ஆகியன இருந்த போதும், பூங்கா புதர் மண்டி காட்சியளிப்பதோடு, நாளுக்கு நாள் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதும் குறித்து அப்பகுதி மக்கள் பல முறை  புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் பூங்காவை சுத்தப்படுத்தி, காவலாளி ஒருவரை பணிக்கு அமர்த்த தயக்கம் காட்டி வருகிறது.சாலை விரிவாக்க பணிகளுக்காக பூங்காவை சுற்றிலும் புதிதாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. அப்போது பழைய சுற்றுச்சுவரை இடிக்காத நிலையில் செயல்படாத பூங்காவிற்கு 2 காம்பவுண்ட் சுவர் இருப்பது நகைப்புக்குரியது.இதுமட்டுமின்றி நகராட்சி எல்லைக்குட்பட்ட ரிசர்வ் சைட்டில் சுமார் 10க்கும் மேற்பட்ட பூங்காக்களும் பராமரிப்பின்றி குப்பை மேடாக காட்சி அளிக்கின்றன. பூங்காக்களின் நிலை மாறுமா என உடுமலை நகர மக்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்….

Related posts

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் கமல்ஹாசன்: ம.நீ.ம. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றம்!