புடலங்காய் தோசை

செய்முறைமுதலில் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு புடலங்காய் துருவலையும் சேர்த்து சிறிது வதக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் போட்டு தேவையான உப்பு, காரப்பொடி சேர்த்து கரைத்து அதில் வதக்கியவற்றைப் போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். கரைத்த மாவை தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வார்க்கவும். சிவக்க விட்டு மொறு மொறுவென்று எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள வெண்ணெய், நெய், வெல்லம் போன்றவை ஏற்றது.

Related posts

தினை அரிசி வெஜிடபிள் உப்புமா

தர்பூசணி தோல் துவையல்

பீட்ரூட் ரைஸ்