புகையில்லா போகி: விழிப்புணர்வு பேரணி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில், பேரூராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் பணியாளர்கள் கலந்து கொண்ட புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு பேரணியை நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் வெ.கணேஷ் தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்டவர்கள், மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் சென்று, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி குப்பைகள், பிளாஸ்டிக், டயர்கள் தவிர்த்து புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, புராதன சின்னமான அர்ச்சுணன் தபசு முன்பு கோலம் வரைந்து, முககவசம் அணிய வேண்டும், புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என பேரூராட்சி பணியாளர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்….

Related posts

ரூ60 லட்சம் வரி பாக்கி: நங்கநல்லூரில் 2 தியேட்டருக்கு சீல்

கார் ஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீ விபத்து: ராமாபுரத்தில் பரபரப்பு

அமைச்சர் சேகர்பாபு இல்ல திருமண வரவேற்பு: தலைவர்கள் வாழ்த்து