புகையிலை விற்ற 3 மளிகை கடைகளுக்கு சீல்

நாமகிரிப்பேட்டை, அக்.2: நாமகிரிப்பேட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ், பேரூராட்சி தூய்மை அலுவலர் லோகநாதன், நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா ஆகியோர் கொண்ட குழுவினர் நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, ஆர்.பி. காட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த சோதனையின்போது, 3 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் உத்தரவின்பேரில் 3 கடைகளுக்கும் சீல் வைத்து ₹75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை