புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

செய்துங்கநல்லூர், செப்.30: செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜான்பால் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட புகையிலை கட்டுப்பாடு மருத்துவ அலுவலர் டாக்டர் வேணுகா, புகையிலை பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கிப் பேசினார். சுகாதார ஆய்வாளர் பால கண்ணன் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் ஆய்வாளர்கள் பிரசாத், நித்தீஸ், அஸ்வின் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுகசேகர் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஸ்டீபன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி