புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: புகை மற்றும் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர்  அப்பழக்கத்திலிருந்து வெளியேறிவிட  வேண்டும் என்ற முடிவுக்கு கொரோனா காலத்தில் வந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.  இத்தகைய சூழலில் புகைப்பழக்கத்திலிருந்து மீள வேண்டும் என்று நினைப்போருக்கு அதற்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டியது தான் மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். இளைஞர்கள் தான் இந்தியாவின் சொத்துகள். ஆனால், புகைப்பழக்கத்தால் அவர்களை நாம் வேகமாக இழந்து கொண்டிருக்கிறோம். அதைத் தடுக்கும் நோக்கத்துடன் புகையிலைக்கும், புகைப்பழக்கத்திற்கும் அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்பதற்கான ஒருங்கிணைந்த சேவையை  தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு