புகார் அளித்த பெண்ணின் அனுமதியுடன் முத்தலாக் சட்டத்தில் முன்ஜாமீன் தரலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘முத்தலாக் தடை சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கலாம்’, என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் திருமண உரிமையை பாதுகாக்கும் சட்டம், கடந்த 2019 ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், முத்தலாக் கூறும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வகை செய்யப்பட்டது. இதனால், முஸ்லிம் பெண்களின் திருமண உரிமைகள் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக பெண்கள் அமைப்பினர் வரவேற்றனர்.  இதற்கிடையே, மருமகளை கொடுமைப்படுத்துவதாகவும் அவரது வீட்டில்தான் கணவர் முத்தலாக் கூறியதாகவும் பெண் ஒருவர் மாமியார் மீது அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில், `குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ், இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் ஜாமீன் வழங்க இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றவியல் சட்டம் 7 சி-யின் கீழ், முன் ஜாமீன் வழங்குவதற்கு எவ்வித தடையும் கிடையாது. அதன் அடிப்படையில், புகார் அளித்த முஸ்லிம் பெண்ணின் முன் அனுமதியுடன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் அளிக்கலாம்,’ என்று கூறி உத்தரவிடப்பட்டது….

Related posts

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்: மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் என மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றம் அதிரடி

இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேறும் மக்கள்.. டெல்லி முதலிடம், பஞ்சாப் 2ம் இடம், குஜராத் 3ம் இடம்!!

கல்வியாளர்கள் எதிர்ப்பை அடுத்து, சட்டப்பிடிப்பின் பாடத் திட்டத்தில் மனுஸ்மிரிதி சேர்க்கப்படாது : டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு!!