பீர்பாட்டிலால் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

சேலம், செப்.8: சேலம் கிச்சிபாளையம் நாராயணநகரை சேர்ந்தவர் விஜயகுமார் (23). இவரது நண்பர்கள் அம்மாபேட்டை வித்யா நகரை சேர்ந்த ஜாபர் ஷெரீப் (35), அசரப்(32), ஹரீஷ். இவர்கள் அனைவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது, ஜாபர் ஷெரீப்பின் மனைவியிடம் விஜயகுமார் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆவேசமடைந்த ஜாபர் ஷெரீப், அசரப், ஹரீஷ் ஆகிய 3பேரும் விஜயகுமாரை சரமாரியாக தாக்கினர். மேலும் பீர் பாட்டிலால் அவரது மண்டையை உடைத்தனர். இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாபர் ஷெரீப், அசரப் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஹரீசை தேடி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்