பீகார் நூடுல்ஸ் ஆலையில் பாய்லர் வெடித்து 7 பேர் பரிதாப பலி

முசாபர்பூர்: பீகாரில் நூடுல்ஸ் தயாரிக்கும் ஆலையில் பாய்லர் வெடித்து 7 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். பலர் காயமடைந்தனர். பீகாரின் முசாபர்பூர் நகரில் பேலா தொழிற்பேட்டையில் நூடுல்ஸ் மற்றும் நொறுக்கு தீனிகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பாய்லர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர். பாய்லர் வெடித்த சத்தம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டுள்ளது. பாய்லர் வெடித்து தொழிற்சாலை கட்டிடம் முற்றிலும் உருக்குலைந்ததோடு, அருகில் உள்ள பல கட்டிடங்களும் சேதமடைந்தன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்….

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு