பீகாரில் 8 ஆண்டுகளுக்கு பின் நிதிஷ் கட்சியுடன் இணைந்தார் குஷ்வாகா

பாட்னா: பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து ராஷ்டிரிய லோக் சமதா கட்சியை இணைத்தார் உபேந்திர குஷ்வாகா. முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திர குஷ்வாகா, ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகி, கடந்த 2013ல் ராஷ்டிரிய லோக் சமதா என்ற புதிய கட்சியை தொடங்கினார். கடந்த 2014ம் ஆண்டில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்த குஷ்வாகா, மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றினார். இதனால் அவருக்கு மத்திய அமைச்சரவையிலும் இடம் தந்தது பாஜ. இதற்கிடையே, குஷ்வாகா கட்சியை சேர்ந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சுமார் 30 பேர் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா கட்சிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தாவினர்.இந்த நிலையில், ராஷ்டிரிய லோக் சமதா கட்சியை நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைப்பதாக உபேந்திர குஷ்வாக நேற்று அறிவித்தார். இதற்கான நிகழ்ச்சி பாட்னாவில் நடந்தது. இணைப்பு விழாவில் உபேந்திர குஷ்வாகா, நிதிஷ் குமார் பங்கேற்றனர். இது குறித்து குஷ்வாகா கூறுகையில், ‘‘தேசிய அளவிலும், மாநில அளவிலும் நிலவும் அரசியல் சூழல் காரணமாக ஒருமித்த கருத்துடையவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம். இதனால் எனது மூத்த சகோதரர் நிதிஷ்குமாருடன் எங்கள் பயணத்தைத் தொடர முடிவு செய்துள்ளோம்’’ என்று கூறியுள்ளார்….

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்