பீகாரில் கள்ளச்சாரயம் குடித்து 21 பேர் பலி

பாட்னா: மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலியாகினர். பீகார் மாநிலத்தில் கட்டாய மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. அதையும் மீறி அங்கு கள்ளச்சாராய விற்பனையும் நடைபெற்று வருகிறது. அங்குள்ள சாப்ரா, மஷ்ரக் மற்றும் இசுவாபூர் ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் 21 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் குடித்தே இறந்ததால், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்னை பா.ஜசார்பில் நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. பீகார் சட்டசபையில் பாஜவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். …

Related posts

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் எதிரொலி; சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு: கார் டிரைவர்கள் சிக்கினர்

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்