பி.எஸ்.எப். செக்யூரிட்டியிடம் செல்போன் பறிக்க முயன்றவர் கைது

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கத்தில் தேசிய எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் மகன் சசீர்பேரா(20) என்பவர் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதியில் நோட்டமிட்டபடி 3 வாலிபர்கள் ஒரே பைக்கில் நேற்று சுற்றி திரிந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்ற சசீர்பேராவை அவர்கள் வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பிடுங்க முயற்சி செய்தனர். உடனே அவர் அலறி கூச்சலிட்டார். இதைக் கேட்ட தேசிய எல்லை பாதுகாப்பு படை அலுவலகத்தின் நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்தனர். இதனை கண்டதும் இரண்டு பேர் பைக்கில் ஏறி தப்பி ஓடினர். ஒருவரை  தேசிய எல்லை பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். தகவலறிந்த காயார் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிடிபட்ட வாலிபரை விசாரித்தனர். அதில், அவர் மாடம்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ்(18) என தெரியவந்தது. புகாரின்பேரில், காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது