பிஸ்கட் வியாபாரம் செய்தபோது லாரி மோதி உயிர் தப்பிய வாலிபர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆரணி அருகே சாலையோரத்தில் நின்று

ஆரணி, ஜன.4: ஆரணி அருகே சாலையோரம் நின்று பிஸ்கட் வியாபாரம் செய்த போது லாரி மோதி உயிர் தப்பிய வாலிபர் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியை சேர்ந்தவர் சூர்யா. இவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தங்கி வேலூர், ஆரணி, ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொது இடங்கள் மற்றும் சாலை ஓரத்திலும், பிஸ்கட் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அதேபோல், ஆரணி அடுத்த சேவூர் பகுதியில் உள்ள ஆரணி- வேலூர் செல்லும் சாலை ஓரத்தில் நேற்று ரஸ்க் பிஸ்கட் வைத்து வியாபாரம் செய்துள்ளார். அப்போது, திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் இருந்து தார்ஜல்லி ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது.

அப்போது, சேவூர் அருகே வந்தபோது, சாலை ஓரத்தில் நின்று பிஸ்கட் வியாபாரம் செய்து கொண்டிருந்த சூர்யா மீது எதிர்பாராத விதமாக லாரி வேகமாக மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக சூர்யா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து அவரை மீட்டனர். இதில், அவர் வியாபாரம் செய்ய வைத்திருந்த பிஸ்கட் முழுவதும் சேதம் அடைந்தது. மேலும், தகவல் அறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் விபத்து குறித்து லாரி டிரைவர் காமராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை ஓரத்தில் பிஸ்கட் வியாபாரம் செய்தபோது டிப்பர் லாரி மோதி அதிர்ஷ்டவசமாக வாலிபர் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்