பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

குளித்தலை, ஏப். 24: திருச்சி மாவட்டம் முசிறி எம்.ஐ.டி வேளாண் கல்லூரி மாணவர்கள் குளித்தலை, தோகைமலை வட்டாரத்தில் ஊரக வேளாண் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தோகைமலை வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை நேரடியாக சந்தித்து வேளாண்மை குறித்த ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். களப்பயிற்சி ஈடுபட்டு வந்த வேளாண் கல்லூரி மாணவர்கள் உலக புவி தினத்தை முன்னிட்டு, நெகிழிப் பையால் ஏற்படும் மாசுக்களை கட்டுப்படுத்த கோரி தோகைமலை பகுதியில் உள்ள கடைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். அனைத்து கடைகளிலும் நெகிழிப் கையால் ஏற்படும் மாசு குறித்து துண்டு பிரசுர விநியோகம் செய்து நெகிழிப்பையை தவறான முறையில் நிலத்தில் வீசி விடுவதால் மண்வளம் கெட்டுவிடுவதால் விவசாயம் பாதிக்கும் என வேளாண் கல்லூரி மாணவர்கள் அகிலன், அரவிந்த், அறிவொளி, அருண்குமார், அஷோக்ராஜ், புவனிஷ், தனுஷ், தனுஷ்வேந்தன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்