பிளாஸ்டிக் கம்பெனியில் பயங்கர தீ

புழல்: செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் கம்பெனி உள்ளது. இதன் அருகே காலி மனை உள்ளது. இந்நிலையில், இந்த இடத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை போட்டு வைத்து தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், கம்பெனியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களில் தீப்பற்றியது. தகவலறிந்த, செங்குன்றம் மற்றும் மாதவரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில், எதிர்பாராதவிதமாக செங்குன்றம் தீயணைப்பு வீரர் சுந்தரமூர்த்தி(50) காயமடைந்தார். உடனே, அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 2 ஆண்டுகள் முன்பு  பிளாஸ்டிக் கம்பெனியில்  தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்