பிளாஸ்டிக் அகற்ற கோரி விசிக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜூன் 25: பெரம்பலூர் மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை, பிளா ஸ்டிக்பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிக்கப்பட்டது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத் தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில், பூமியிலுள்ள தண்ணீரை உறிஞ்சுகிற சீமைக்கருவே லி மற்றும் பிளாஸ்டிக் பொ ருட்களைநிரந்தரமாக தடை செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பின்னர் பெரம்பலூர் மாவ ட்டக் கலெக்டரை நேரில்சந் தித்து மனு கொடுக்கப் பட் டது.

அதில் பெரம்பலூர் மாவட்ட த்திலுள்ள ஒவ்வொரு பஞ் சாயத்திலும் பஞ்சாயத்து தலைவர், துணைத்தலை வர், வார்டு மெம்பர் உட்பட தங்களுடைய பஞ்சாயத் தில் முழுவதுமாக பிளாஸ் டிக், சீமைகருவேலி இவைக ளை 100நாள் வேலை வாய் ப்பு திட்டத்தின்மூலமாக தி ட்டப் பயனாளிகளை முழு மையாகப் பயன்படுத்தி பஞ்சாயத்தில் முழுவதுமா க இவைகளை இல்லாமல் அப்புறப்படுத்த ஆணை இடும்படி மாவட்டகலெக்ட ரை கேட்டுக் கொண்டோம் மேலும் சாலை ஓரங்களி லும் படிந்திருக்கின்ற பிளா ஸ்டிக் மற்றும் சீமை கருவே லிகளை அப்புறப்படுத்துவ தற்கு சாலை பணியாளர்க ளை பயன்படுத்தலாம் என் று ஆலோசனை வழங்கப்பட்டது.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு