பிளாட்பாரத்தில் கத்தியை உரசி சென்ற மாணவர்களில் மேலும் ஒருவர் கைது

திருவள்ளூர்,: சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக திருத்தணி செல்லும் புறநகர் மின்சார ரயிலில் கத்தியை வைத்துக் கொண்டு இரயில் நிலைய பிளாட்பாரத்திலும், வண்டியின் மீதும் தேய்த்துக் கொண்டு பயணிகளை அச்சுறுத்தும் வீடியோ சமூக வளைதலங்களில்  வைரலானது.  இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை இரயில்வே இருப்புப்பாதை காவல் துறை மற்றும் இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் திருவள்ளூர் ரயில் நிலைய நடைமேடை எண் 4-ல் சென்னை – திருத்தணி செல்லும் மின்சார வண்டியில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வந்த மாணவர்களை தணிக்கை செய்தனர். அப்போது, கத்தியை வைத்திருந்த பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த திருவாலங்காட்டை சேர்ந்த தனுஷ் மற்றும் பூண்டி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பி.ஏ.வரலாறு முதலாமாண்டு மாணவன் மதன் ஆகிய 2 மாணவர்களையும் பிடிக்க முற்பட்டனர். அப்போது தனுஷ் எனற மாணவன் தப்பி ஓடி விட்டான்.  மதன் (17) என்ற மாணவனை கைது செய்தனர். இதில் தப்பி ஓடிய தனுஷ் என்பவனை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று காலை வீட்டருகே இருந்தவனை ரயில்வே இருப்புப் பாதை போலீசார் கைது செய்தனர்.  விசாரணையில் அந்த மாணவன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ., வரலாறு 2-ம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. மேலும் சென்னை புறநகர் ரயிலில் கத்தியை பிளாட்பாரத்தில் தேய்த்தவாறும்,  ரயிலில் தேய்த்தவாறும் சென்றது தனுஷ் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்த  தனுஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்