பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது

சேலம், பிப்.13: சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு மார்ச் மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வுமார்ச் 4ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது.

இந்நிலையில், நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது. 24ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு, பிளஸ் 2 வகுப்பில் 35,758 மாணவர்களும் மற்றும் பிளஸ் 1 வகுப்பில் 38,644 மாணவர்களும் என மொத்தம் 74,402 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொடங்கியது. காலை முதல் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.பாட வாரியாக காலை மற்றும் மாலை வேளைகளில் செய்முறை தேர்வு நடத்தப்பட்டது. செய்முறை தேர்வுகள் 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதில், 20 மதிப்பெண்கள் செய்முறை தேர்வு மூலமும், 10 மதிப்பெண்கள் அக மதிப்பீடு மூலமும் வழங்கப்படுகின்றன.

இந்த செய்முறை தேர்வுகள் வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. இதில் 23,379 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். செய்முறை தேர்வுக்கு தேவையான ஆய்வக பொருட்கள், போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி, பாடவாரியாக அட்டவணை தயாரித்து, எந்தவித குளறுபடியும் இன்றி செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் அறிவுறுத்தியுள்ளார். இதேபோல், வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை, பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 28,612 மாணவர்கள் பங்கேற்கின்றனர். 321 தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு
நடக்கிறது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை